PRODUCT DETAILS
'ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு கார்' என்ற மிகப் பெரிய கனவின் மூலம்தான் இந்திய மக்களுடைய கவனத்துக்கு வந்தார் ரத்தன் டாடா. 'இது சாத்தியம்தானா?' என்று சிலரும், 'சாத்தியமாகிவிட்டால் எப்படி இருக்கும்!' என்று பலரும் வியந்து நிற்க, ரத்தன் டாடா தலைமையில் தொழில்நுட்பம், விடாமுயற்சியின் துணையோடு அந்தக் கனவை நனவாக்கிச் சாதனை புரிந்தது டாடா நிறுவனம். ஆனால், ஒரு லட்ச ரூபாய்க் காருக்கு முன்பும் சரி, பின்பும் சரி, ரத்தனுடைய சாதனைகள் ஏராளம். டாடாவைப் போன்ற ஒரு மிகப் பெரிய குழுமத்தைத் தொலைநோக்குடன் வழிநடத்தியவர், புதிய பணிவாய்ப்புகளை உருவாக்கியவர், உலக அரங்கில் இந்தியாவுக்குத் தனி மதிப்பை உண்டாக்கித்தந்தவர் என ரத்தனுடைய பங்களிப்பு மிகப் பெரியது. யார் இந்த ரத்தன் டாடா? டாடா குடும்பத்தில் பிறந்ததாலேயே அவர் அந்நிறுவனத்தின் தலைவராகிவிட்டாரா? இத்தனைப் பெரிய சாதனைகளைப் புரிவதற்கான அடித்தளத்தை அவர் எப்படி உருவாக்கிக்கொண்டார்? நானோவைப்போல் அவர் அறிமுகப்படுத்திய, மாற்றியமைத்த புதுமைத் தயாரிப்புகள் என்னென்ன? இந்தியத் தொழில்துறைக்கு அவருடைய கொடைகள் என்னென்ன? அவருடைய வெற்றிக் கதையில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் எவை? இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் சுவையான நடையில் சான்றுகளுடன் பதிலளிக்கிறது என். சொக்கனுடைய இந்தப் புத்தகம், ரத்தன் டாடா என்ற மனிதரை, மேலாளரை, தலைவரை, ஆளுமையைச் சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது.
Unveiling the Legacy: Ratan Tata by N. Chokkan (Tamil Edition)
Interested in Indian business leaders and the story behind the Tata Group's success? Look no further than "Ratan Tata" by N. Chokkan, a captivating biography written in Tamil that delves into the life and achievements of one of India's most respected industrialists.
This insightful book goes beyond the headlines to explore the making of a legend. You'll discover:
The Early Life and Influences that Shaped Ratan Tata: Uncover the formative years of Ratan Tata and the experiences that instilled in him the values of leadership, innovation, and social responsibility that would become the hallmarks of his career.
From Dream to Reality: The Birth of the Nano Car: Explore the iconic story behind the Tata Nano, the one lakh rupee car that revolutionized personal transportation in India. Witness the challenges overcome and the technological advancements that made this dream a reality.
The Tata Legacy: A Visionary Leader and His Impact: Gain a deeper understanding of Ratan Tata's contribution to the Tata Group's growth and diversification. Learn how his leadership transformed the company into a global powerhouse while upholding ethical standards and social responsibility.
Beyond the Boardroom: The Humanitarian and Philanthropist: Discover Ratan Tata's commitment to social causes and his unwavering dedication to giving back to society. Explore the philanthropic initiatives he spearheaded and the positive impact they continue to create.
The Man Behind the Success: Leadership Principles and Lessons Learned: This captivating biography offers valuable insights into Ratan Tata's management style and leadership philosophy. Gain practical knowledge and learn from his triumphs and challenges to shape your own approach to success.
Written in an engaging and informative style, "Ratan Tata" by N. Chokkan is more than just a biography; it's a testament to perseverance, vision, and the power to make a difference. Whether you're a budding entrepreneur, a business student, or simply someone inspired by the journey of an iconic leader, this book offers a wealth of knowledge and a compelling story un folded in Tamil.